சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையம் – துண்டிக்கப்பட்ட மின்சாரம் அழுத்தங்களால் சில நிமிடங்களில் மீள வழங்கல்!!
இலட்ச கணக்கில் மின் கட்டணம் செலுத்தாத எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான மின் துண்டிப்பை மேற்கொண்ட மின்சார சபை சில நிமிடங்களில் அரசியல் மற்றும் பிற அழுத்தங்களால் மீள மின்சாரத்தை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று மின்சார சபைக்கு இலட்ச கணக்கில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மின் துண்டிப்பு செய்யப்பட்டு , சில நிமிடங்களில் அழுத்தங்கள் காரணமாக மின்சாரம் மீள வழங்கப்பட்டுள்ளது.
சாதாரணர்கள் சிறிய தொகைகளை செலுத்த தவறும் போதே மின் துண்டிப்புகளை செய்யும் மின்சார சபையினர் அரசியல்வாதிகள் இலட்ச கணக்கில் பணம் செலுத்த வேண்டியதாக உள்ள போதிலும் அவர்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்வதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ள நிலையில் , தற்போது அரசியல்வாதிகளின் உறவினர்கள் மின் கட்டணம் செலுத்தாத போதிலும் அவர்களுக்கும் மின் துண்டிப்பினை மேற்கொள்ளாது மின்சார சபை தவிர்ப்பது பலரும் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”