சர்ச்சைக்குரிய சாமியார் ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம்?
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நித்தியானந்தா தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறு கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.