நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி 4 பேர் பலி- 24 பேர் படுகாயம்..!!
உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் நான்கு பேர் இறந்தனர். சுமார் 24 பேர் படுகாயமடைந்தனர். பாரபங்கியில் உள்ள மகுங்குபூர் அருகே இரட்டை அடுக்கு பேருந்து பின்னால் இருந்து டிரக் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. நேபாளியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டபுள் டெக்கர் பேருந்து, கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதன் டயர் ஒன்று பஞ்சராகி விட்டது.
அப்போது பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தில் இருந்த 60 பயணிகளில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர். இவர்களை பாரபங்கி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு காயமடைந்தவர்களில் 6 பேரை மருத்துவர்கள் லக்னோ ட்ராமா சென்டருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மீதமுள்ள பயணிகள் பாதுகாப்பாக மீட்டு நேபாளத்திற்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.