பாராளுமன்ற தேர்தல்- ராகுல் காந்தி நடத்திய சர்வே..!!
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா முழு அளவில் தயாராக தொடங்கி விட்டதால் ராகுல்காந்தியும் புதிய வியூகங்கள் வகுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். தனது புதிய வியூகங்கள் குறி தவறாத அம்பாக இருக்க வேண்டும் என்று நினைத்த ராகுல், அது தொடர்பான சர்வே ஒன்றை ஏஜென்சி ஒன்று மூலம் நாடு முழுவதும் நடத்தினார். அனைத்து மாநில மக்களிடமும் அந்த சர்வே நடத்தப்பட்டது. அதன் முடிவுகளைப் பார்த்து ராகுல் மிக மிக வேதனை அடைந்துள்ளாராம்.
2024-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என்று அந்த சர்வேயில் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம். மேலும் பாராளுமன்ற தேர்தலில் 50-க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாம். எனவே பாத யாத்திரையில் வேறு ஏதேனும் புதுமைகள் செய்யலாமா என்று மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். புதிய வியூகங்கள் குறி தவறாத அம்பாக இருக்க வேண்டும் என்று நினைத்த ராகுல், அது தொடர்பான சர்வே ஒன்றை ஏஜென்சி ஒன்று மூலம் நாடு முழுவதும் நடத்தினார்.