அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முக்கிய சந்திப்பு!!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (3) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.