சந்நிதியில் தமிழக ஓதுவாரின் திருப்புகழ் இசைநிகழ்ச்சி!!
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி மகோற்சவத்தை ஒட்டி நாளை 11 ஆம் திருவிழா (06.09.2022) தொடக்கம் தீர்த்தத் திருவிழா வரை தினமும் பிற்பகல் நான்கு மணிக்கும் இரவு சுவாமி திருவீதியுலா நிறைவிலும் திருப்புகழ் பாமாலை இசைநிகழ்வு நடைபெறவுள்ளது.
தமிழகம் பழநி ஆலய ஓதுவார் திருமுறை இசைச்செல்வர் வெ. விக்னேஷ் ஆறுமுகம் பக்கவாத்திய சகிதம் இந்த இசைநிகழ்ச்சியை வழங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”