விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!
நாளை (5) நள்ளிரவிலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 100- 200 ரூபாய்க்கிடையில் குறைவடையவுள்ளதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் லிட்ரோ நிறுவனம் அதிகம் இலாபம் ஈட்டியுள்ளதென்றும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் லிட்ரோ நிறுவனம் 700 மில்லியனுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கபட்டாலும் உணவு பொருள்களின் விலையை குறைக்க முடியாது என சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.