ஆந்திராவில் கடத்தல் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களை ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஏலம் விட முடிவு..!!
ஆந்திராவில் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் திருப்பதி, கடப்பா ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 5,700 டன் செம்மரக்கட்டைகள் உள்ளன. இதில் 2,640 டன் செம்மரங்களை வரும் அக்டோபர் முதல் 2023 ஆண்டு மார்ச் வரை பல்வேறு கட்டங்களாக ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.
இந்த ஏலத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு 3,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 2014-2018 ம் ஆண்டு வரை 1,251 டன் செம்மரக்கட்டைகள் ஏலம் விடப்பட்டது. இதன் மூலம், 7505 கோடி வருவாய் கிடைத்தது. இந்த செம்மரங்களுக்கு சீனா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது.