டெங்கு அபாயம் அதிகரிக்கிறது!!
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் 1304 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தெஹிவளை, ஹோமாகம, கடுவலை, மஹரகம, கொழும்பு நகரம், பத்தரமுல்லை, எகொடஉயன மற்றும் கொதட்டுவ ஆகியவை டெங்கு வேகமாக பரவும் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகவும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.