வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண் பெண் அணிகள் 1ம் இடம்!! (PHOTOS)
2022ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் 1ம் இடத்தை பெற்றுகொண்டனர்.
கடந்த 03/9/2022 ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற குறித்த மல்யுத்த போட்டியின் வெற்றிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் பெரும் பங்கு வகித்தனர்.
குறித்த மாகாணமட்ட மல்யுத்த(Wrestling) போட்டியில் தங்கம் – 6, வெள்ளி – 2, வெண்கலம் – 6 பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
அதேவேளை தங்கம் – 9, வெள்ளி – 4 பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும் ஆண்கள் அணி தொடர்ச்சியாக 3 வருடங்கள் 1ஆம் இடத்தையும், பெண்கள் அணி தொடர்ச்சியாக 2 வருடங்கள் 1ஆம் இடத்தையும் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்ட அணியில் கரைச்சிக்குடியிருப்பு, உண்ணாபிலவு, இரணைப்பாலை, உடையார்கட்டு, வல்லிபுனம், முள்ளியவளை, தண்டுவான் மற்றும் கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் மாவட்ட பாடசாலைகள் சார்பாக முல்/வித்தியானந்தா கல்லூரி, முல்/ கலைமகள் வித்தியாலயம், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, வள்ளிபுனம் மகாவித்தியாலயம், உடையார்கட்டு மகாவித்தியாலயம், தண்டுவான் மகாவித்தியாலய மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அணிசார்பாக போட்டியில் பங்குபற்றி மாவட்ட வெற்றிக்கு பங்காற்றியிருந்தனர்.
இவ் வெற்றிக்கு வழி வகுத்த Puvanasekaram Tharsan Coach அவருக்கு முல்லைத்தீவு மாவட்டம் விளையாட்டுத்துறையினரின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
குறித்த போட்டித் தொடரில் தங்கம் 2, வெள்ளி 4, வெண்கலம் 6 பதக்கங்களைப் பெற்ற யாழ்ப்பாண ஆண்கள் அணி 2ம் இடத்தையும், மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலம் 3 ஆகிய பதக்கங்களைப் பெற்ற வவுனியா 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
பெண்கள் பிரிவில் தங்கம் 1, வெள்ளி, வெண்கலம் 1 ஆகிய பதக்கங்களைப் பெற்ற வவுனியா மாவட்டம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.