நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கீடு..!!
தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கசுவரெட்டிபட்டி ஏரி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் சுமார் 58 குடும்பங்கள் வசித்துக்கொண்டு வருகின்ற னர். இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்த ஊசி, பாசி மணிகள் விற்பது, பச்சை குத்துதல் மற்றும் திருவிழா நடைபெறும் பகுதிகளில் சென்று விளையாட்டு பொம்மைகள் விற்பது போன்ற சிறு வியாபாரங்களை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் பருவமழை அதிகம் பெய்தமையாலும், மேட்டூர் காவிரி உபரிநீர் 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்திலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் ஏரி நிரம்பியது.ஏரி நீர் நரிக்குறவர்கள் குடியிருந்து வந்த குடியிருப்பு பகுதிகளை முழுவதுமாக சூழ்ந்து கொண்டதால் அங்கு அவர்களால் வசிக்க முடியாத நிலை உருவானது.இந்த சூழ்நிலையில் கடந்த 10 நாட்களாக அனைத்து மக்களும் வெளியேற்ற பட்டு தாரமங்கலம் சந்தை பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடோனில் தங்க வைத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கபட்டு வந்தன. அதனை தொடர்ந்து அவர்களுக்கான நிரந்தர இடம் ஒதுக்கி குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் பேரில் வருவாய் துறையினர் பல்வேறு இடத்தை தேடிவந்த நிலையில் தற்போது தாரமங்கலம் ஊராட்சி.ஆரூர்பட்டி கிராமம்.வெள்ளக்கல்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 5 ஏக்கர் இருப்பது கண்டறியப்பட்டு அதில் குடியிருப்புக்காக 1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளனர் . அதில் குடும்பத்திற்கு தலா 2 சென்ட் அளவுகொண்ட வீட்டுமனைகள் முதற்கட்ட மாக 44 குடும்பங்களுக்கு ஒதுக்கபட்டு பட்டா வழங்க உள்ளனர். அதனை தொடர்ந்து அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரவும் பரிசீலனை செய்யப்படும். .தெருவிளக்கு.குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வீட்டு–மனைக்கான இடத்தை சப்-கலெக்டர் வீர் பிரதாப் சிங் நேரில் பார்வையிட்டார். அப்போது ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன், வருவாய் ஆய்வளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, .ஆரூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மமாள் காங்கேயன், நரிக்குறவர்கள் இன குடும்ப தலைவர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர் .மேலும் ஏரிநீர் செல்லும் புதிய கால்வாய் பணி .பெரியாம்பட்டி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்திற்கு வேலி அமைக்கும் பணியை–யும் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார் .