;
Athirady Tamil News

ஏற்காட்டில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை..!!

0

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது .

ஏற்காட்டில் கன மழை
குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை கனமழையாக கொட்டியது. மேலும் விடிய விடிய சாரல் மழையாக நீடித்தது.இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. ஏற்காடு மலைப்பாதையில் புதிது, புதிதாக அருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டியது.இதனை சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். ஏற்காட்டில் மழையை தொடர்ந்து 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் தவியாய் தவித்தனர்.இேத போல ஓமலூர், சங்ககிரியிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. சிற்றாறுகள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் மாநகரில் நேற்றிரவு 9. 30 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக பெய்தது. இந்த மழையால் அம்மாப்பேட்டை, பச்சப்பட்டி, தாதகாப்பட்டி, பெரமனூர், கிச்சிப்பாளையம் நாராயண நகர், திருவாகவுண்டனூர் பைபாஸ் உள்பட பல பகுதிகளில் சாலைகளில் சாக்கடை நீருடன், தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதில் சில இடங்களில் தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 70.2 மி.மீ. மழை பெய்துள்ளது . ஓமலூர் 63, சேலம் 48.8, சங்ககிரி 47.3, காடையாம்பட்டி 20, எடப்பாடி 15, கரியகோவில் 15, பெத்தநாயக்கன் பாளையம் 5, மேட்டூர் 3.2, தம்மம்பட்டி 2, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 290.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.