குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம்!!
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (06) முதல் வெள்ளிக்கிழமை (09) வரை 1 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய A முதல் W வரையான 20 வலயங்களில் நாளை (06) தொடக்கம் 9ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின் வெட்டு அமுலாகவுள்ளது.