மகசீனை ஒப்படைக்க வந்தவர் கைது!!
கொழும்பு, காலி முகத்திடல் போராட்டத்தளத்தில் கண்டெடுத்ததாகக் கூறி, ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 30 தோட்டாக்கள் அடங்கிய மகசீனை, பாணந்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்க வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டாக்கள் அடங்கிய மகசீனுடன் பொலிஸ் நிலையத்துக்கு வந்த 35 வயதுடைய பாணந்துறை கோரக்கன பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
காலி முகத்திடல் போராட்டத்தளத்தில் கடமையாற்றிய பாதுகாப்புப் படை வீரரின் துப்பாக்கிக்கு சொந்தமானது மகசீன் என நம்பப்படுவதாகவும் அங்கு விழுந்து கிடந்த போது கண்டெடுத்ததாகவும் அவர் வக்குமூலம் வழங்கியுள்ளார்.
எனினும், சந்தேக நபருக்கு தோட்டாக்கள் அடங்கிய மகசீன் எவ்வாறு கிடைத்தது என்றும் அவர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.