இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் – பிரதமர் மோடி..!!
பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்திட வேண்டி மேம்படுத்தப்படும் என ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ல் தொடங்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் மாற்றியமைக்கும் சீர்திருத்தங்களுக்கு வழிவகுப்பதை நோக்கமாக புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டுள்ளது. பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் தரம் உயர்த்திட வேண்டி மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி பள்ளி கல்வியை வழங்குவதற்கான நவீன, கண்டுபிடிப்பு சார்ந்த, கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தேசிய கல்வி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மேலும் பயனளிக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.