டெல்லி ராஜபாதை கர்த்தவ்யா பாதை என பெயர் மாற்றம்..!!
தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ராஜ்பாத் என்ற பெயரை கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ராஜபாதையை மேம்படுத்தி, அழகுபடுத்தும் அனைத்துப் பணிகளும் திட்டமிட்டப்படி வேகமாக நடந்து வருகின்றன. புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை ஜனாதிபதி உள்ளி்ட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது சென்ட்ரல் விஸ்டா திட்டம். டெல்லி ராஜபாதை முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், ராஜபாதையின் பெயர் கர்த்தவ்யா பாதை என மாற்றப்பட்டுள்ளது.