பயண ஆலோசனையை புதுப்பித்தது கனடா !!
இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயண ஆலோசனையை கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.
அதற்கமைய செம்மஞ்சள் பட்டியலில் இருந்த இலங்கையை மஞ்சள் பட்டியலுக்கு கனடா மாற்றியுள்ளது.
அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்தல் என்பதிலிருந்து அதிக அளவு எச்சரிக்கையுடன் செயற்படவும் என்னும் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைக்கான பயணத்தின் ஆபத்து நிலை குறைவடைவதை இந்த மாற்றம் சுட்டிக்காட்டுகிறது.
எரிபொருள், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்னும் தட்டுப்பாடு நிலவும் நாட்டில் பொருளாதார நெருக்கடி இன்னும் நீடிப்பதால், இலங்கை பச்சை பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தின் இறுதியில், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து மற்றும் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.