;
Athirady Tamil News

அமெரிக்கா, உக்ரைன் அதிபர்களுடன் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் பேச்சு வார்த்தை..!!

0

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார்.

அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும் ரஷியா அதிபர் புதின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்தார்.

இதனிடையே, லிஸ் ட்ரஸ் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுயெல்லாவின் தாயார் உமா தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவா வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ். 1960 ஆண்டு சுயெல்லாவின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.