;
Athirady Tamil News

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை ஓயாது; ரஷிய அதிபர் பேச்சு..!!

0

ரஷியாவின் கிழக்கே அமைந்துள்ள விளாடிவோஸ்டாக் என்ற துறைமுக நகரில் நடந்த வருடாந்திர பொருளாதார கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, உக்ரைனில் படைகளை அனுப்புவதன் முக்கிய இலக்கின் பின்னணி என்னவெனில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள குடிமக்களை பாதுகாக்கும் நோக்கமே. இதற்கான 8 ஆண்டுகள் போருக்கு பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராணுவ நடவடிக்கையை தொடங்கியது நாங்கள் இல்லை. நாங்கள் அதற்கு ஒரு முடிவு கட்டவே முயன்று வருகிறோம் என அவர் கூறியுள்ளார். உக்ரைனில் மாஸ்கோ ஆதரவு கொண்ட தனி பகுதிகளை பாதுகாப்பதற்காகவே படைகள் அனுப்பப்படுகின்றன என அவர் கூறியுள்ளார். ரஷியாவுடன் கிரீமியாவை இணைத்ததன் தொடர்ச்சியாக 2014-ம் ஆண்டில் இருந்தே உக்ரைன் படைகளுடனான மோதல் நடந்து வருகிறது. எங்களது அனைத்து நடவடிக்கைகளும் தொன்பாஸ் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே ஆகும். அது எங்களது கடமை. அதனை இறுதிவரை போராடி நாங்கள் நிறைவேற்றுவோம் என புதின் பேசியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார, நிதி சார்ந்த மற்றும் தொழில்நுட்ப தாக்குதல் ஆகியவற்றை ரஷியா தடுத்துள்ளது. இந்த நாடுகளின் தடைகளை எல்லாம் எதிர்கொண்டு, ரஷியாவின் இறையாண்மை வலுப்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் எதனையும் இழக்கவில்லை. இழக்க போவதுமில்லை. ரஷியாவில் பொருளாதார மற்றும் நிதி சூழல் ஸ்திரப்படுத்தப்பட்டு, நுகர்வோர் விலை பணவீக்கம் குறைந்து உள்ளது. வேலைவாய்ப்பின்மையும் மிக குறைவாக உள்ளது. தேவையற்ற, தீங்கு தரும், எங்களை முன்னேற தடுக்கும் ஒவ்வொன்றையும் புறந்தள்ளி விட்டு வளர்ச்சிக்கான வலிமையை நாங்கள் அடைவோம். ஏனெனில் இறையாண்மையின் அடிப்படையிலேயே வளர்ச்சியானது அமையும் என அவர் கூறியுள்ளார். ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய மேற்கத்திய நாடுகள் முயன்றது முட்டாள்தன செயல் என கூறிய புதின், ஆசியாவில் எங்களுக்கு போதிய வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.