இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்கள் 36 பேர், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நாளை (08) காலை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 36 எம்.பிக்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை முப்பது ஆக மட்டுப்படுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அந்த எண்ணிக்கையை 36 ஆக அதிகரிக்க வேண்டியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.