வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு யாழ்.இந்துக் கல்லூரி வழங்கும் சந்தர்ப்பம்!!
உயர்தர விஞ்ஞான பிரிவில் கற்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச விடுதி வசதிகளுடன் , மேலதிக வகுப்புக்களை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளதாகவும் , யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வன்னி பிரதேசம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளை சேர்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க ஆர்வமுள்ள மாணவர்கள் எமது பாடசாலையில் இணைந்து கல்வி கற்பதற்கான ஓர் சந்தர்ப்பத்தினை யாழ் இந்துக் கல்லூரி ஏற்படுத்தி தருகின்றது.
அவர்களுக்கான விடுதி வசதியினை இலவசமாக வழங்குவதுடன் பாடசாலை நேரத்திற்கு மேலதிகமான கற்பித்தல் நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு எமது ஆசிரியர்கள் தயாரகவுள்ளனர்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு உயர்தர பிரிவிற்கு 30 மாணவர்களுக்கான அனுமதியினை வழங்கவுள்ளோம். எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கவும் என பாடசாலை நிர்வாகம் கோரியுள்ளது.