மோசடியில் சிக்கிய அரச நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைவர்!!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு உரிமம் இன்றி ருமேனியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொது மக்களிடம் பணம் மோசடி செய்த அரச நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைவரை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் பத்தரமுல்லை மற்றும் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இதில் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக 500க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 21 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.