ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு போதைபொருள் கடத்தலுக்கு துணை புரிந்த வெளிநாட்டு பெண் கைது..!!
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து ஒரு கும்பல் கர்நாடகாவிற்கும், கேரளாவிற்கும் போதை பொருள் கடத்தி வருவது தெரியவந்தது. இவர்கள் எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதை பொருளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சப்ளை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதில் சிலர் போலீசார் கையில் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போதை பொருள் கடத்தல் கும்பலை போலீசார் தேடி வந்தனர். இதில் கானா நாட்டை சேர்ந்த ஏஞ்சலா தகிஜிவா பரோபரி (வயது 26) என்பவருக்கு போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதை கேரள போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து பெங்களூரு ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கியிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அங்குள்ள கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவருக்கு கோர்ட்டு நீதி மன்ற காவல் வழங்கியது. இதையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைதான கானா நாட்டு பெண்ணுக்கு இன்னும் பலர் உதவி செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே அவர்களையும் கைதுசெய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வரு வார்கள். இது தொடர்பாக தனிப்படை போலீசார் கூறும்போது இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிவித்தனர்.