வாகனங்கள் அல்லாத இயந்திரங்களுக்கும் எரிபொருள் பெறப் பதிவு முறை அறிமுகம்!!
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர (National Fuel Pass – QR Code System) நடைமுறையின் கீழ் வாகனங்கள் அல்லாத மோட்டார் இயந்திரங்களையும் பதிவு செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனமல்லாத, ஜெனரேட்டர் போன்ற இயந்திரங்களையும் பதிவு செய்து தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், இது தொடர்பில் பொது மக்களுக்கான அறிவித்தலை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு விரைவில் வெளியிடும் என்றும் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவராண்மை நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”