;
Athirady Tamil News

“யுனிகார்ன் சாய்ந்துவிட்டது”.. ராணி எலிசபெத் II மரணம் அடையும் முன் நடந்தது என்ன? அந்த கடைசி நொடி! (படங்கள்)

0

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II நேற்று இரவு காலமானார். இவர் மரணம் அடைவதற்கு முன்பு என்ன நடந்தது? இந்த மரண தகவல் எப்படி பரப்பப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சோர் கேஸ்டல் என்ற இடத்தில்தான் மகாராணியின் வீடு உள்ளது. எலிசபெத் இங்கேதான் வாழ்ந்து வந்தார். பக்கிம்ஹாம் பேலஸ் என்பது அரச அரண்மனை.

இங்கு அவர் அலுவல் ரீதியான பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் விண்ட்சோர் கேஸ்டலில் இருந்த ராணி எலிசபெத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு உடல்நலம் கடந்த சில நாட்களாகவே மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் திடீரென நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு அவரின் உடல்நிலை மோசமாகி உள்ளது.

என்ன நடந்தது?

இதையடுத்து எலிசபெத் உடனடியாக பலமோரல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இங்குதான் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. மிகவும் மோசமான உடல்நிலையோடு எலிசபெத் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. இந்த இடம் ஸ்காட்லாந்தில் இருக்கிறது. பொதுவாக மகாராணி இறந்தால் அந்த செய்தியை தெரிவிக்க ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்ற முறை பயன்படுத்தப்படும். அதன் மூலமே எல்லோருக்கும் தகவல் அனுப்பப்படும்.

ஆப்ரேஷன் யுனிகார்ன்

ஆனால் நேற்று ராணி மருத்துவ சிகிச்சை பெற்றது ஸ்காட்லாந்தில். ஸ்காட்லாந்தில் ராணி இருக்கும் போது அங்கே அவர் மரணம் அடைந்தால் அதற்கு பெயர் ஆபரேஷன் யுனிகார்ன். அதை பயன்படுத்திதான் இறந்த தகவலை தெரிவிப்பார்கள். யுனிகார்ன் ஸ்காட்லாந்தின் தேசிய விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ராணி எலிசபெத்தின் உடல்நிலை மோசமானதும், இது தொடர்பாக பக்கிம்ஹாம் பேலஸ் சார்பாக அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டது.

அறிக்கை,

அதில், எலிசபெத் II உடல்நிலை மோசமாக இருப்பதாகவும். அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்திய நேரப்படி இன்று மாலை 8 மணி அளவில் சில ஊடகங்கள் ராணி எலிசபெத் II இறந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டன. இது உடனே சர்ச்சையானது. ஆனால் அதை பக்கிம்ஹாம் பேலஸ் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் ராணி எலிசபெத் உடல்நிலை இன்னும் மோசமானது. உடனே சார்ல்ஸ் தனி விமானத்தில் ஸ்காட்லாந்து வந்தார்.

வில்லியம்

பேரன் வில்லியம் மற்றும் அவரின் மனைவி குழந்தைகள் இன்னொரு விமானத்தில் ஸ்காட்லாந்து வந்தனர். அதேபோல் மற்ற குடும்பத்தினரும் தனி தனியாக ஸ்காட்லாந்து வந்தனர். இவர்கள் எல்லோரும் ஸ்காட்லாந்துக்கு வரும் முன்பாகவே ராணி எலிசபெத் மரணம் அடைந்துவிட்டார். ஆனாலும் உறவினர்கள் வந்து உறுதி செய்த பின்பே ராணி எலிசபெத் மரணம் குறித்து உறுதி செய்யப்பட்டது. பின்னர் அது அதிகாரபூர்வமாக அறிவிக்க ஆபரேஷன் யுனிகார்ன் பயன்படுத்தப்பட்டது.

என்ன நடக்கும்?

யுனிகார்ன் சாய்ந்துவிட்டது என்று தகவல் உடனே அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் படி, முதலில் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த தகவல் ரகசியமாக தெரிவிக்கப்படும். இதன் மூலம் டிராபிக் சேருதல், கூட்டம் கூடுதல் கட்டுப்படுத்தப்படும். பின்னர் இந்த ராஜாங்கத்தின் கீழ் உள்ள 14 நாடுகளுக்கு தகவல் அனுப்பப்படும். அதோடு, ராணி இறந்த போது அவர் இருந்த நாட்டில் உடனடியாக நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும். பின்னர் மீடியாக்களுக்கு தகவல் தெரிவித்து, செய்தியை எப்போது வெளியிட வேண்டும் என்றும் கூறப்படும்.

தகவல்

அதன்பின் புதிய ராஜாவை அறிவிப்பதற்கான உடனடி ஏற்பாடுகள் செய்யப்படும். இதை தொடர்ந்து யுனியார்க் ஆப்ரேஷனின் கடைசி கட்டமாக பக்கிம்ஹாம் பேலஸ் அறிவிப்பை வெளியிடும். அவர் ஸ்காட்லாந்தில் மரணம் அடைந்த காரணத்தால், அவரின் உடல் Holyroodhouse என்ற பகுதியில் வைக்கப்படும். இதையடுத்து அவரின் உடல் எடின்பர்கில் இருக்கும் Royal Mile பகுதிக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.