திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்..!!
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் திருப்பதி வந்தார். வரும் வழியில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு மாலை, சால்வைகள் அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று மாலை திருப்பதி வராஹசாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருமலைக்கு சென்ற அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 6 மணிக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.