வவுனியாவில் அமைதி வழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)
வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் அமைதிவழி கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பீடாதிபதி ஜி.கமலக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.அன்னமலர் சுரேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு அமைதி வழி கல்வித்திட்டம் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளே இருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை திருப்தி போன்ற ஆற்றல் மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த கற்கை நெறியைபூர்த்தி செய்திருந்த ஆசிரிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி பொன்னையா சத்தியநாதன், விரிவுரையாளர்களான ரி.லிங்கேஸ்வரி, பி.ஜெயச்சந்திரன், அமைதிவழி கல்வித்திட்ட இணைப்பாளர்களான குகானந்தராஜா கீர்த்திகா, விமலநாத சர்மா, ஜே.ஜெயந்தினி என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.