ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு!!
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக மனித உரிமை நடைமுறைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கான பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.