பொலிஸார் மீது தாக்குதல்!!
புத்தளத்தின் ஆனமடுவ- கொட்டுகச்சி பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புத்தளம் பிரிவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மூவர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து விட்டு பொலிஸ் நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கொட்டுக்கச்சி- பூரணாகம பகுதியில் வீதியை மறித்த இனந்தெரியாதோர் இரும்பு மற்றும் மரக்கட்டைகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.