500 வைத்தியர்கள் வெளிநாடு பறந்தனர்!!
இலங்கையைச் சேர்ந்த சுமார் 500 வைத்தியர்கள் கடந்த 8 மாதங்களில் வெளிநாடு சென்றுள்ளனர் என்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இந்நிலைமை பாரதூரமான விடயம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற பல வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இராஜினாமா அறிவித்தல் விடுத்துள்ள வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
வைத்தியர்களின் புலம்பெயர்வு நாட்டின் சுகாதாரத் துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்த அவர், இந்நிலைமை நாட்டின் அப்பாவி மற்றும் ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.