மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!!
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்கு என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.