ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிரடி அறிவிப்பு!!
ஆசியக் கிண்ணத் தொடரில் சம்பியனான இலங்கை அணியினர் மற்றும் சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் சம்பியனான பெண்கள் அணியினர் நாளை (13) நாடு திரும்புகின்றனர்.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வலைப்பந்தாட்ட வீராங்கனைகளை வரவேற்க வீதிகளில் அணிவகுத்து நிற்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட ஆசிய சாம்பியன்கள் நாளை (13) காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலிருந்து கொழும்புக்கு அணிவகுத்துச் செல்ல உள்ளனர்.
அவர்களை வரவேற்க தெருக்களில் வரிசையாக இருப்போம்” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.