மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு பின்னர் அதனுடைய வரத்து அதிகரித்துள்ளது; வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பு!!
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு பின்னர் அதனுடைய வரத்து அதிகரித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் பதுக்கிவைத்துவிட்டு தற்போது
விலை அதிகரிக்கப்பட்ட பின்னர் தற்போது வாரத்துக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் விநியோகிக்கிறதா என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பினார்.
யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய் வராமல் மக்கள் பட்டினியால் பாரிய சிக்கல்களுக்கு உள்ளாகினர். மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் 1200 ரூபாய்க்கு வாங்கி தொழில் செய்ய வேண்டி ஏற்பட்டது.
மண்ணெண்ணெய் விலையை 340ஆக அதிகரித்துவிட்டு தற்போது வாரத்துக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் வருகின்றது. ஆனால் தொழில் செய்வதற்கு நம்மிடம் பணம் இல்லை. ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலை செய்து கொள்ளையடித்து விட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொள்கிறார்கள்.
தற்போது மானியம் என்ற போர்வையில் படகுகளின் பதிவுப் புத்தகங்களையும் வங்கி கணக்கிலக்கங்களையும் நீரியல்வளத் திணைக்களத்தினர் வாங்கினார்கள். புரவிப் புயலுக்கும் இவ்வாறு வாங்கி ஏமாற்றினர்.150 ரூபாவுக்கு உட்பட்டோ பழைய விலைக்கோ மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம். அந்த விலைக்கு
மண்ணெண்ணெய் தராது விட்டால் நான்கு மாவட்ட கடற்றொழிலாளர்களும்
கலந்தாலோசித்து வடக்கில் நாங்கள் போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம்.150 ரூபாவிற்கு உள்ளே மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கினால் தான் எம்மால் தொழில் செய்ய முடியும். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் தெரிவித்து முறையிட்டும் பலனில்லை.
சரியான அரசாங்கமாக இருந்தால் அரசாங்கம் அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதியிடம் இருந்து பணத்தை எடுத்து நாட்டை அபிவிருத்தி செய்யுங்கள். மண்ணெண்ணெய் விலையேற்றம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. அதை பற்றி யாருக்கும் சிந்தனை கிடையாது.
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சுருக்கு வலை, நுளம்பு வலை போன்ற சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துவிட்டதனால் மீன்வளங்கள் அழிக்கப்படுகிறது.
இதற்கு எந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததில்லை. அமைச்சர்கள் இருந்துவிட்டு நாளை போய் விடுவார்கள்.
நீரியல்வளத் துறையே இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”