கொல்கத்தாவில் பாஜக பேரணியில் வன்முறை- போலீஸ் வாகனத்திற்கு தீவைப்பு..!!
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்து இருந்தது. அதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல இடங்களில் இருந்து பாஜகவினர் குவியத்தொடங்கினர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் ரெயில் நிலையங்களில் வைத்தே பாஜகவினர் தடுக்கப்பட்டதாக அக்கட்சி போலீசார் மீது குற்றம் சாட்டினர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.