ரஷியாவிடம் இருந்து 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்பு..!!
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ரஷியா, கைப்பற்றிய பகுதிகளை மீட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “வடகிழக்கில் இருந்து பகுதிகளை உக்ரைன் படைகள் மீட்டு வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை எங்களது படைகள் மீட்டெடுத்து உள்ளன. நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இதில் ரஷிய படை வீரர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். ரஷியாவுக்கு சரியான பதிலடியும் கொடுக்கப்படுகிறது” என்றார்.