இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரல்!!
உதயவாழ்வு சமூக மேம்பாட்டு மையத்தால் வட்டுக்கோட்டை இணைச்செயலகத்தில் வருடாவருடம் நடத்தப்படும் இலவச தையல் பயிற்சிநெறி ஆரம்பமாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 மாத கால இந்தப் பயிற்சிநெறிக்கு 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க முடியும்.
பயிற்சிநெறிக்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன் வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள உதயவாழ்வு இணைச்செயலக காரியலாயத்தில் காலை 9.30மணி முதல் மதியம் 1.30 மணிவரை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”