காரில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட வயோதிபப் பெண் !!
பண்டாரகம, களுத்துறை வீதியின் யட்டியான பகுதியில் இன்று (13) காலை ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த கார் வீதியை விட்டு விலகி அதே திசையில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் யட்டியான பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
பெண் காரில் மோதுண்டு, 23 மீற்றர் தூரத்தில் தூக்கி எறியப்பட்டு வீதியின் ஓரத்தில் விழுந்தார். விபத்து நடந்த இடத்திலிருந்து 70 மீற்றருக்கு அப்பால் காரை சாரதி நிறுத்தியுள்ளார்.
காரை ஓட்டிச் சென்ற 23 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.