சீன தூதுவர் முக்கிய சந்திப்பு!!
இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா மற்றும் அதன் இலங்கைப் பணிப்பாளர் சென் சென் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (13) இடம்பெற்றதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்து அவர்கள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.