கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்தது !!
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று (14) முதல் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாய் ஆகும்.
எனினும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை 2,000 ரூபாயைத் தாண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.