ஆடியபாதம் வீதியில் கடை உடைத்து களவு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று திருட்டில் ஈடுபட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தின் வாயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி மூட்டை, பால்மா பெட்டி வகைகள், கோதுமை மா, எண்ணெய், பிஸ்கட் உள்ளிட்டவற்றை களவாடி சென்றுள்ளது.
களவாடிய பொருட்களை மோட்டார்சைக்கிள்களில் எடுத்து செல்வது அருகிலுள்ள வர்த்தக நிலைய சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து, முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”