வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் !! (PHOTOS)
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளி, எமது நிலம் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டதை நீக்கு, வடக்கு கிழக்கில் மனித உரிமை காவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, அரசு மனித உரிமை அனைவருக்கும் சொந்தமானது என்ற பதாகைகளை தாங்கியவாறு காணப்பட்டனர்.