;
Athirady Tamil News

தசரா விழாவில் ஆபாச நடனங்களுக்கு தடை -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு..!!

0

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தசரா விழாவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏராளமான பணம் செலவழித்து சென்னை, மும்பையில் இருந்து நடன பெண்கள், துணை நடிகைகள், சின்னத்திரை நாடக நடிகர்களை அழைத்து வந்து, பக்தர்களிடையே சினிமா பாடல்களுக்கு நடனமாடச்செய்கின்றனர். இதனால் இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் மனம் புண்படுகிறது.

நன்மதிப்பை குறைக்கிறது
இந்த நடிகர், நடிகைகள் அரை குறை ஆடைகளுடன் ஆடுவது பக்தர்களின் மீதான நன்மதிப்பை பிற மதத்தினரிடம் குறைக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டில் ஆபாச நடனத்தை ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனாலும் இந்த திருவிழாவில் கவர்ச்சி நடனங்கள் தொடர்கின்றன. எனவே ஆன்மிக நிகழ்ச்சியான குலசேகரன்பட்டினம் தசரா சார்ந்த நிகழ்ச்சிகளில் பக்திப் பாடல்கள் இல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களை ஒலிபரப்பி ஆபாச நடனம் ஆடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இதனை மீறும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்கள், தசரா குழுக்கள் மற்றும் நடிகர் மற்றும் நடிகையர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

புகைப்படங்கள்
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கவர்ச்சி நடனம் தொடர்பான புகைப்படங்கள் நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. அதனை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அரசு தரப்பில் வக்கீல் திலக்குமார் ஆஜராகி, ஏற்கனவே கோர்ட்டு விதித்த வழிகாட்டுதல்களின்படி கோவில் திருவிழாக்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு வழிகாட்டுதல்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் ஏற்கனவே போலீஸ் அதிகாரிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்தார். அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

ஆபாச நடனங்களுக்கு தடை
பின்னர் நீதிபதிகள், கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை அனுமதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர். விசாரணை முடிவில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதை போலீசார் கண்காணிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.