;
Athirady Tamil News

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

0

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று(14) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிரான்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிரான்குளம் பகுதியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்ற நபர் வீட்டிற்கு திரும்பாத நிலையில், நேற்று காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.