;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரி அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கான இருபது வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டித்தொடரில் புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி மாகாணமட்டத்தில் இரண்டாவது இடத்தினை பெற்று இலங்கை முழுவதுமான தேசிய மட்டப்போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது . இந்நிலையில் இவ்வணிக்கான பயிற்சிமுகாம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 18 வயது பெண்கள் பிரிவு அணியினரும் இப்பயிற்சிகளில் கலந்துகொண்டுள்ளனர் . கல்லூரி நிர்வாகத்தினர் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழக உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களிடம் நேற்று விடுத்த அவசர வேண்டுகோளுக்கிணங்க நேற்றைய தினமே விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன .

சமூக சேவகரும் யாழ் கந்தர்மடம் பலாலி வீதியில் அமைந்துள்ள த பீட்சா ( The Pizza ) உணவக உரிமையாளருமான திரு. கோபாலபிள்ளை முரளீதரன் அவர்களின் நிதியுதவியில் மேற்படி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.