18 இலட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு !!
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் 18 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு போசனையான மதிய உணவை வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன பாடசாலை மாணவர்களின் போசாக்கிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால், ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளின் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 27 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் ஒரு வேளை போசனையான உணவுக்காக நாளொன்றுக்கு 82 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் இந்த அரிசியை சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.