;
Athirady Tamil News

ஆன்லைனில் கடன் வாங்கிய சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

0

திருப்பதி அடுத்த நாயுடு பேட்டையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா (வயது 32). இவருக்கு ரஜிதா என்ற மனைவியும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ஹரி கிருஷ்ணா சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். பின்னர் சாப்ட்வேர் நிறுவனம் ஹரி கிருஷ்ணாவை வேலையிலிருந்து நீக்கி விட்டனர்.

இதனால் வருவாய் இன்றி குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்ட ஹரி கிருஷ்ணா ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கினார். அவருக்கு வருவாய் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என தொடர்ந்து செல்போனில் மிரட்டி வந்தனர்.

அதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரிகிருஷ்ணா நேற்று தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினார். அதில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதால் தனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். குழந்தையை நன்றாக பார்த்துக்கொள். தந்தை இல்லாத குழந்தை எவ்வளவு சிரமப்படும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் குழந்தையை நன்றாக கவனித்துக்கொள் என தகவல் அனுப்பி இருந்தார். இதையடுத்து நாயுடு பேட்டை அருகே உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்ற ஹரிகிருஷ்ணா அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் ஹரி கிருஷ்ணா பிணத்தை மீட்டு அவரது சட்டை பையில் இருந்து கடிதத்தை கைப்பற்றினர். தனது தாய் தந்தைக்கு ஹரிகிருஷ்ணா கடிதம் எழுதி இருந்ததார். உங்களைப் பிரிந்து செல்வது எனக்கு மனவேதனையாக உள்ளது. என் மனைவியும் மகளையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் என கடிதத்தில் எழுதியுள்ளார். ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றவர்கள் ஆந்திராவில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதால் ஆன்லைன் கடன் வழங்கும் ஆப்பை தடை செய்ய வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.