வெளிவிவகார அமைச்சின் கணனி கட்டமைப்பில் கோளாறு !!
கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை, உரிய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய தூதரக சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.