வடமாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டம்!! (படங்கள்)
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 அரசியல் கைதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தாது விசாரணைகளை மேற்கொள்ளாது தொடர்ச்சியாக தடுத்து வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த 12 அரசியல் கைதிகளின் உறவினர்களும் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”