இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு புதிய நிதியுதவி கிடையாது !!
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடையத் தொடங்குவதால், இந்த ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்க இந்தியா திட்டமிடவில்லை என இந்தியாவின் அரச உயர் மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே 3.8 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளதாகவும், இதற்கு மேலும் இந்தியா நேரடி உதவிகளை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அவ் உயர்மட்டம், தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதால் இனிமேல் அவர்கள் ஐ.எம்.எப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் இந்திய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளதாம்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டின் இறுதியில் ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவுடன் இலங்கை நடத்த திட்டமிட்டுள்ள நன்கொடையாளர் மாநாட்டிற்கு இந்தியா பங்கேற்கும் எனவும் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.