இலங்கையில் தேர்தல் ஊழல் மிகுந்தது !!
இலங்கையின் தேர்தல் செயல்முறை பலவீனமானது என்றும் ஊழல் மிகுந்தது என்றும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, இவ்வாறு கூறுவது சர்ச்சைக்குரியது என்றாலும் அதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போது பல கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் பிரதான தலைவர்களின் கருத்தியலுக்கு புறம்பாக செயற்பட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், வேட்பாளர்கள் தொடர்பான நெறிமுறைகள் சட்டமாக்கப்பட வேண்டும் என்றும் அவை அவர்களின் பதவிக்காலம் முழுவதும் சமமாக செல்லுபடியாக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அடுத்தவருடம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.